நண்பர்களே! பல நாட்களாக தமிழில் வலைப்பதிவு எழுதவேண்டும் என்ற ஒரு ஆவல் எனக்குள் இருந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை அதற்கான நேரம் தான் கிடைக்கவில்லை. (இது எங்க நல்ல நேரம்தான் என்று நீங்கள் கூறுவது என் காதுக்கு சத்தியமாக கேட்கவில்லை!). சரி, உங்களை ஒரு வழி பண்ணாமல் விடப்போவதில்லை என்று முடிவு பண்ணியாகிவிட்டது.
இந்த வலைப்பூவில் உற்சாகமும் தரமான விவாதங்களும் மட்டுமே பேசப்படும். தனி மனித தாக்குதல்களுக்கோ அல்லது ஜாதி, மத, இன வேறுபாடுகளைப்பற்றியோ கண்டிப்பாக பேச அனுமதி இல்லை. கூடிய மட்டும் தமிழ் சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். பின்னூட்டம் இடும் அன்பர்களுக்கும் இதை நான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தாகி விட்டது. உங்கள் பின்னூட்டங்களை இங்கு இட்டு இந்த சிறியவனை உற்சாகப்படுத்தினால் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
2 comments:
அட நானும் உங்களைப் போலவே ' இதுதான் ஆரம்பம் ' என்று ஆரம்பித்தேன். யாருமே எட்டிப் பார்க்கவில்லை. அந்தக் குறை உங்களுக்கு இருக்க வேண்டாம் . என் பின்னூட்டம் முதலாவதாய் இருக்கட்டும்.
மிக்க நன்றி சார்லஸ்
Post a Comment