அரிந்தோடும் செல்வத்தை ஓயாது தினம்தேடித்
திரிந்திங்கே தவிக்குமென் மனமே! - நடப்பது
அரியின் ஆட்டம்தான் அறிவாயே உனதுயிரும்
பிரியியுமுன் அவன்பாதம் பற்று.
பற்றறுத்து அரிப்பாதம் பற்றிடும் நல்லடியார்க்கு
குற்றம் குறையேது மனமே! - என்றும்
சற்றேயும் தளராது நாராயணன் நாமத்தை
ஒற்றிப் பணிந்து நீ செல்.
செல்வமும் ஞானமும் கல்வியும் ஓங்கிடவே
வல்வினையை அழிப்பாயே மனமே! - நாவின்
சொல்லாலே பாடிடுவாய் கண்ணபிரான் திருநாமம்
நல்வழியை காட்டிடுவான் அவன்.
அவன்நாமம் நினைத்திட்டால் நற்கதியும் கிட்டிடுமே
சிவனும் அன்றுரைத்தானே மனமே! - மனிதர்
தவம்செய்ய வேண்டாமே முக்தியையும் தந்திடுவான்
எவனும் நினைத்திட்டால் அவனடி.
அடிபணியும் அடியார்க்கு தடையதனை தகர்த்திடுவான்
முடிப்பீலி மயிலிறகோன் மனமே! - பாதம்
பிடித்தோர்க்கு பதமலரின் அருளுண்டாம் அடியோர்க்கு
மடிப்பிச்சை தந்திடுவான் முரளி.
முரளியவன் பாதத்தை பற்றுடனே பற்றிட்டால்
வரமாயிரம் வழங்கிடுவான் மனமே! -அருளை
கரமதனால் பொழிந்திடுவான் கருத்துள்ளே காத்திட்டு
சிரம்தாழ்ந்தால் சென்றிடுமே வினை.
வினையாவும் வீழ்ந்திடுமே வாமனனின் நாமத்தை
நினைத்தாலே நற்கதியாம் மனமே! - மாந்தர்
தனைத்தானே அறிந்திட்டால் சத்தியமாய் கேட்டிடுமே
மனையாவும் மங்கலத்தின் ஒலி.
ஒலியாவும் கேட்பதுவே அவன்கருணை மழையாலொப்
பிலியப்பன் அருளால்தான் மனமே! - ஞாலக்
கலிவினைகள் களைந்திடுமே திருமாலின் திருக்கரச்சங்
கொலியதனை கேட்டாலே சுகமே.
சுகமிங்கு நிலைத்திடவே நாராயணன் நாமத்தை
அகமகிழக் கேட்டிடுவாய் மனமே! - கண்ணன்
புகழினையே பைந்தமிழில் பாடவந்தேன் அந்தாதி
இகம்காக்க இயம்பிடுவாய் அரி.