Tuesday 17 January 2017

புத்தியுள்ள மனிதரெல்லாம்

பல வருடங்களுக்கு பிறகு எனது கல்லூரி நண்பன் சபரி என்னை தொடர்பு கொண்ட போது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
எங்களது நண்பர் பட்டாளம் அடிக்காத கூத்தே இல்லை. காலத்தின் கட்டாயத்தால் கல்லூரி முடிந்த பின் ஒவ்வொருவரும் ஒரு திசையில் பிரிந்து போய் விட்டோம். ஆனால் பிரிந்த ஒவ்வொருவரும் சில நண்பர்களுடன் மட்டும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார்கள்.

சபரி என்னை தொடர்பு கொண்டவுடன் நான் அவனிடம் எங்களது நண்பர்களுக்கான ஒரு Whatsapp  குழுவை உறுவாக்க சொன்னேன். நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக இரண்டே நாட்களில் ஒருவர் மற்றொருவரிடம் தொடர்பு கொண்டு எங்களது நண்பர்கள்  கிட்டத்தட்ட 90 சதவிகிதத்தினர் சேர்ந்து விட்டார்கள்.

Whatsappல் ஒரு வசதி. ஓசியில் வெளிநாட்டு போன் கால் செய்யலாம் என்பதால் ஒவ்வொரை ஒருவர் தொடர்பு கொண்டு மனதார பழைய கதைகளை பற்றி பேசிக்கொண்டோம். எங்கள் setல் தியாகராஜன் என்பவனும் சோமு என்பவனும் இறந்து விட்டார்கள் என்பதை கேட்க மிகவும் மனது சங்கடப்பட்டது.

கல்லூரியில் படிக்கும் போது சில நண்பர்கள் பல்வேறு காரணங்களால் ஃபெயில் ஆகி விட்டார்கள். அதனால் ஒரு வருடம் பின் தங்கி விட்டார்கள். நாங்கள் கல்லூரியை முடித்து வெளியே வந்த போது அவர்கள் கடைசி வருடத்தில் இருந்தார்கள். அதன் பின் அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று இத்தனை வருடங்கள் தெரியாமல் இருந்தது. அப்படி படிப்பில் ஃபெயில் ஆன சில நண்பர்களை பற்றி தான் இந்த கட்டுரை. 

ராஜேந்திரன் என்று ஒரு நண்பன். கல்லூரியில் ஃபெயில் ஆகி கடைசியில் கஷ்டப்பட்டு ஒரு வழியாக தேர்வு பெற்று ஒரு சிறிய நிறுவனத்தில் சேர்ந்தான். அதில் இரண்டு வருடங்கள் வேலை செய்து விட்டு ஒரு பெரிய granite கம்பெனியில் சேர்ந்தான். வெகு சீக்கிரமாக அந்த நிறுவனத்தின் ஏற்றுமதி டிபார்ட்மென்ட்டின் வியாபார‌ நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு ஜெர்மனி சென்று விட்டான். இன்று அவன் ஜெர்மனி நாட்டின் குடிமகன். ஃப்ராங்க்ஃபர்ட் நகருக்கு அருகில் சொந்தமாக ஒரு granite நிறுவனத்தை நடத்தி வருகிறான்.

குலோத்துங்கன் என்பவன் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறான். அவன் மற்ற நண்பர்களை போல் இல்லாமல் ஒரு படி மேலே சென்று எங்களது செட்டின் மற்றொரு நண்பனான லக்ஷ்மணசாமிக்கு அவனுடைய நிறுவனத்திலேயே HR டிபார்ட்மென்ட்டில் மானேஜராக‌ வேலை போட்டு கொடுத்தான்.

அருள் என்ற நண்பன் சொந்தமாக ஒரு கலைக்கல்லூரி, ஒரு நகைக்கடை, ஒரு ஃபைனான்ஸ் நிறுவனம் ஆகியவற்றை சொந்த ஊரில் நடத்தி கொண்டிருக்கிறான்.

எழில் என்பவன் படிப்பில் படு மோசமாக இருந்தான். அவன் இப்போது பெங்களூரில் ஒரு பெரிய ஐ.டி. நிறுவனத்தின் அதிபர்.

இவர்கள் அனைவருடைய கதைகளிலும் ஒற்றுமை என்ன தெரியுமா? அனைவருமே படிப்பில்  ஃபெயில் ஆனவர்கள் என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். நான் சொல்லாத விஷயம், நாங்கள் அனைவருமே பொறியாளர்கள். நாங்கள் படித்தது இஞ்ஜினியரிங் கல்லூரியில்.

ஒவ்வொரு நண்பனுக்கும் ஒரு புனைப்பெயர் இருந்தது. அந்த வகையில், லக்ஷ்மணசாமி என்பவனுக்கு Bond என்ற பெயர். 30 வருடங்களுக்கு பிறகு Bond -இடம் நேற்று பேசினேன். மிகவும் நெகிழ்ந்து போய்விட்டான். பேச்சு வாக்கில், "மரக்காணத்தில் உங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க?" என்று கேட்டேன். ஒரு பெரிய பெருமூச்சுடன், "எல்லாம் போய் சேர்ந்துட்டாங்கடா" என்றான். திடீரென்று எங்கள் அனைவருக்கும் 50 வயதை தாண்டி விட்டது சுருக்கென்று நினைவு வந்தது. 

அருளிடம் நான் பேசும் போது அவன் குடும்பத்துடன் இலங்கையில் சுற்றுலாவில் இருந்தான். கிட்ட த்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு பேசுவதால் ஆரம்பத்தில் "நீங்க எங்கே இருக்கீங்க?" என்றான். நான், "என்னது, திடீர்னு வாங்க போங்கனு சொல்ற" என்றேன். உடனே, 
"அது இல்லடா மச்சி" என்று மடை திறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்து விட்டான்.. ஆஹா, கேட்க எவ்வளவு ஆனந்தமாக‌ இருக்கிறது. இந்த நட்பில் எந்தவிதமான‌ எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் ஏமாற்றமும் இல்லை. 

நாங்கள் கல்லூரியில் படித்த எதையுமே வாழ்க்கையிலோ வேலையிலோ உபயோகப்படுத்தவில்லை. அவற்றை எல்லாம் எதற்காக விழுந்து விழுந்து படித்தோம் என்றும் தெரியவில்லை. படிப்பில்  ஃபெயில் ஆனவர்கள் உண்மையில் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் யாருமே எங்கும் இப்போது வேலைக்கு செல்லவில்லை. பிறருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டிருக்கிறார்கள். ஒரு வருடம் ஃபெயில் ஆகி விட்டோமே என்று தளர்ந்து விடாமல் தன்னம்பிக்கையுடன் சொந்த கால்களில் இருக்கிறார்கள்.

கல்லூரியில் ஃபெயில் ஆகாமல் தேர்வு பெற்ற நாங்களோ பிற நிறுவனங்களில் வேலை தேடிக்கொண்டு பிறகு பிழைப்புக்காக வளைகுடா, அமெரிக்கா என்று சென்று விட்டோம். பணத்துக்காக ஆன்மாவை விற்று விட்டாலும் பிறந்த மண்ணும் நட்பும் மறக்க கூடிய விஷயங்களா? 

பொறியியல் படித்து விட்டு சம்பந்தமே இல்லாத துறையில் கால் பதித்து அதில் மாபெரும் வெற்றியும் பெற்று விட்டார்கள் நண்பர்கள். அதற்கு முழு முதற்காரணம், கடவுளின் கருணையும் அவர்களின் தீராத உழைப்பும், எது வந்தாலும் சந்திப்போம் என்ற துணிவும் தான். வாழ்க்கையில் மனிதனுக்கு ஒரு கதவு மூடினால் பல கதவுகள் திறக்கும் என்று கூறுவார்கள். அது எவ்வளவு உண்மை. ஒரு வருடம் அவர்கள் படிப்பில்  ஃபெயில் ஆனதால் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை. ஒருவருக்கு விதித்த பாதை இன்னொருவருக்கு பொருந்தாது. கூட்டி கழித்து பார்த்தால், அவர்கள் என்ன படித்தார்கள் என்பதை விட  உபயோகமாக என்ன சாதித்தார்கள் என்பது தான் வாழக்கையில் முக்கியமாகி விடுகிறது.  வாழ்க்கை பயணத்தின் குறிக்கோளே இது தானோ?
14 comments:

SS said...

Pramatham..vaazhkaiyin nitharsanama unmayai!!!

bala said...

எவ்வளவு யதார்த்தம். அருமை.

Expatguru said...

நன்றி SS

Expatguru said...

நன்றி பாலா

சார்லஸ் said...

அருமை அருமை நண்பரே ...உங்கள் பதிவு என் வாழ்க்கைக்கும் பொருந்துகிறது. நானும் என்னுடன் படித்த நண்பர்களை எல்லாம் நினைவிற்கு கொண்டு வந்தேன். நீங்கள் குறிப்பிட்டிருப்பதை போலவே மிகவும் சுமாராக படித்தவர்கள், என்னோடு சேர்ந்து டிகிரி முடிக்காதவர்கள் அனைவரும் என்னை விட உயர்ந்த இடத்தில் இப்போது அமர்ந்திருக்கிறார்கள் .

அவர்களிடம் பேசியபோது ஒரு உண்மை புரிந்தது . சரிவு அவர்களை சீண்டியிருக்கிறது . தோல்விகள் அவர்களை வெறி கொள்ள வைத்திருக்கின்றன. வெற்றி பெறவும் செய்திருக்கின்றன. பள்ளிப் பாடத்திற்கும் வாழ்க்கைப் பாடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதைப் புரிந்து கொள்ள பல காலம் பிடித்திருக்கிறது.

அப்துல் கலாம் அவர்கள் சொல்வார்: என்ன படித்தேன் என்பது மறந்து போனது. எதைச் சந்தித்தேன், யாரைச் சந்தித்தேன் , என்ன நம்பிக்கையை கற்றுக் கொண்டேன் என்பது மட்டுமே நினைவில் உள்ளது என்பார். அதுபோல கல்லூரி அவர்களுக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறது ; சுய சார்பை போதித்திருக்கிறது; போராட கற்றுக் கொடுத்திருக்கிறது; உலகத்தை புரிய வைத்திருக்கிறது. அவர்களின் வெற்றிக்கு அதுவே காரணம்.

Anonymous said...

சார்லஸ்

அருமையான பதிவு . என்னுள் எங்கோ ஏங்கும் எண்ணங்கள் வந்து போக வைத்தது உங்களின் பதிவு . மீண்டும் ஒரு நாஸ்டால்ஜிக் நினைவை எழுப்பும் பதிவு.

சார்லஸ் said...

அருமையான பதிவு . என்னுள் எங்கோ ஏங்கும் எண்ணங்கள் வந்து போக வைத்தது உங்களின் பதிவு . மீண்டும் ஒரு நாஸ்டால்ஜிக் நினைவை எழுப்பும் பதிவு.

Expatguru said...

மிக்க நன்றி சார்ல்ஸ். வழக்கம் போல எளிய‌ தமிழில் அழகான‌ உங்களது விமர்சனத்தை மிகவும் ரசித்தேன்.

rasri said...

அருமையான பதிவு. Google CEO சுந்தர் பிச்சை சென்றவாரம் IIT-யில், வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, தோல்வியை சந்தித்தால்தான் சாதிக்க முடியும்.education is only a minor part of success, passion on what ever you do is key factor and only who is able to realise his thinking into practice can succeed, the level of success depends on how many attempts he has tried or faced failures before the success. Hope the young parents change their approach towards their kids' education ( giving waitage to kids passion)

Expatguru said...

Thanks rasri

G.M Balasubramaniam said...

இதைப் படித்தபோது கடவுளுடனான என் உரையாடல் நினைவுக்கு வந்தது சுட்டி தருகிறேன் நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்
/ http://gmbat1649.blogspot.com/2011/11/blog-post_16.html