Tuesday 21 January 2014

திண்ணியம் முருகன் கோவில்

ராஜராஜ சோழனின் அக்கா பெயர் குந்தவை பிராட்டியார். இவர் ஆன்மீக கொடை வள்ளலாக திகழ்ந்தார். சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ( தோராயமாக கி.பி.995). ஒரு மாட்டு வண்டியில் முருகன், வள்ளி மற்றும் தெய்வானை விக்ரகங்களை ராஜ மரியாதையுடன் குந்தவை பிராட்டியார் தஞ்சாவூருக்கு சிப்பாய்களுடன் எடுத்து சென்று கொண்டிருந்தார். முருகனை சுமந்து கொண்டு சென்ற மாட்டு வண்டி கூழையாறு என்ற சிறு நதியை கடந்த உடனே  மாட்டின் கால் இடறி  கவிழ்ந்து விட்டது.  அதில் அந்த முருகன் விக்ரகத்தின் வலது கால் உடைந்து விட்டது. விக்ரகத்தை எவ்வளவு முயற்சி செய்தும் விழுந்த இடத்திலிருந்து தூக்க முடியவில்லை. அதனால் அதே இடத்தில் குந்தவை முருகனுக்கு ஒரு அழகான் கோவில் கட்டினார். இது கல் வெட்டில் பதிவாகியுள்ளது.


பல நூற்றாண்டுகள் கழிந்தன. பலர், எத்தனையோ முறை அந்த‌ உடைந்த மூலவரின் காலை செப்பனிட முயற்சித்து அது ஏதாவது ஒரு காரணத்தால் ஒவ்வொறு முறையும் தோல்வியிலேயே முடிந்தது. ஒரு முறை அவ்வாறு முயற்சிக்கும் போது ஊர் பெரியவர் ஒருவரின் கனவின் முருகன் தோன்றி "உங்கள் வீட்டில் உள்ள குழந்தை ஊனமாகி விட்டால் அந்த குழந்தையை தூக்கி எறிந்து விடுவீர்களா? அதே போல என்னை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று கூறிவிட்டார்.  முருகனே கட்டளை இட்டுவிட்டதால் அதற்கு பின் இன்று வரை யாருமே மூலவரின் காலை சரி செய்ய முயற்சிக்கவில்லை. இன்று கூட அபிஷேகத்தின் போது கூர்ந்து கவனித்தால் தான் இது தெரியும். மற்றபடி வெள்ளி கவசம் சாத்தியிருந்தால் தெரியாது.

இந்த கோவில் இன்றைய திருச்சி மாவட்டம், லால்குடியிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில், காட்டூர் சர்க்கரை ஆலையிலிருந்து 5 கிலோமீட்டர்  தூரத்தில் உள்ளது. இந்த கோவிலில் சில விசேஷங்கள் உள்ளன. எல்லா கோவில்களிலும் தக்ஷிணாமூர்த்தி தெற்கு திசையை பார்த்து கொண்டிருப்பார். ஞானத்தை தரும் தக்ஷிணாமூர்த்தி போல, முருகன்  தெற்கு திசையை பார்த்து அருள் புரிகிறார். இது மிக மிக விசேஷமாகும். உலகில் தெற்கு பார்த்த மூலவர் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு அதீதமான, அற்புதமான‌  சக்தி இருப்பதை உணரலாம். உதாரணம், மயிலை கற்பகாம்பாள், திருச்செந்தூர் முருகன், திருக்கடையூர் அபிராமி போன்றவை. அதே போல, வள்ளி மற்றும் தெய்வானை விக்ரகங்களுக்கும் தனித்தனியே மயில் வாகனங்கள் உள்ளன. ஒரே இடத்திலிருந்து நேராக பார்த்தால் முருகனும், இடது பக்கம் பார்த்தால் சிவனும் தெரிவார்கள். இந்த கோவிலில் உள்ள நவகிரகங்கள் அனைத்துமே சூரியனை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இது போன்ற விசேஷங்கள் உள்ள கோவில் உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்த கோவிலில் முருகனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். சிவனின் பெயர் இங்கு கோஷ்டீஸ்வரர். அன்னையின் பெயர் ப்ருஹன் நாயகி. 

வெளி பிரகாரத்தில் வினாயகர் ந்ருத கணபதியாக காட்சி தருகிறார். இந்த கணபதியை வேண்டுபவர்களுக்கு எதிரிகளின் பயமும் தொல்லையும் தீரும் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. துர்கை, கால பைரவர், நாக தேவர் என்று பல மூர்த்திகள் வெளி பிரகாரத்தில் உள்ளன. மனிதனின் மனதில் தோன்றும் ஆறு தீயவைகளை களைந்து அருள் புரிகிறான் ஆறுமுகன். காமம் (இச்சை), க்ரோதம் (கோபம்), லோபம் (கஞ்சத்தனம்), மோஹம் (ஆசை), மதம் (செருக்கு), மாஷர்யம் (பொறாமை) ஆகிய 6 தீய குணங்களை ஆறுமுக கடவுளாக காட்சி தரும் முருகன் தீர்த்து வைக்கிறான்.

இத்தனை விசேஷங்கள் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுகிறது. எழைகளுக்கு அன்னதானம் உட்பட பல நல்ல காரியங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை செய்யலாம். 

T V MURALI
SECRETARY
THINNIAM WELFARE TRUST
24 ROYAR THOPE
SRIRANGAM
TRICHY - 620006
MOBILE: 9994442934
email: thinniamkovil@gmail.com 

ராஜராஜ சோழன் காலத்து கோவிலில் இத்தனை விசேஷங்கள் இருப்பது எல்லா தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க கூடியது அல்லவா? இந்த அற்புதமான் கோவிலுக்கு ஒரு முறை விஜயம் செய்து முருகனின் அருளை பெற்று வளமாக வாழுங்கள். 


9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவல்... கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

Expatguru said...

நன்றி, தனபாலன்.

G.M Balasubramaniam said...

சில நேரங்களில் எப்படி ஒரேவிதமான புனைவுகள் கோவிலைச் சார்ந்து எழுகிறது என்று ஆச்சரியமாயிருக்கிறது.இப்படியெல்லாம் கதைகள் இருந்தால்தான் கடவுளின் சக்தி தெரிய வருமோ என்னவோ. திருச்சியில் பல ஆண்டுகள் இருந்தும் இக்கோவிலை தரிசிக்கவில்லை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Bhuvaneshwari Shankar said...

Thoroughly enjoyed reading this Historical article!

Expatguru said...

Thanks Bhuvana. Glad that you liked it.

Expatguru said...

நன்றி ஜி.எம்.பி. சார். இந்த கோவிலின் அர்ச்சகர்கள் ஜீவனத்துக்கே மிகவும் சிரமப்படுகிறார்கள். ஸ்வாமி விளக்கு ஏற்றுவதற்க்கே கஷ்டம். பல இன்னல்களுக்கு பிறகு பல வருடங்களுக்கு பிறகு கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த காலத்தில் கோவில்களை பாதுகாக்க அரசர்கள் இருந்தார்கள். இப்போது அத்தி பூத்தாற்போல எப்போதாவது இந்த கோவிலுக்கு வந்தால் தான் வருமானமே. குந்தவை பிராட்டியாரும் ராஜராஜ சோழனும் இன்று இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்கள். இது போன்ற புராதனமான பொக்கிஷங்களை நாம் பாதுகாக்கா விட்டால் அடுத்த தலைமுறைக்கு ஒன்றுமே இருக்காது என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

சுவாரசியமான கோவில் தகவல். மனதைப் பிசையும் பின்னூட்டத் தகவல்.

Expatguru said...

நன்றி, அப்பாதுரை. அர்ச்சகர்களின் வறுமையை கட்டுரையில் நான் சொல்ல விரும்பவில்லை. அது பிச்சை கேட்பதற்கு சமமாகும். தவிர, அது அவர்களின் தன்மானத்தை பாதிக்கும். ஆனால் வேதம் படித்த இவர்களுக்கு அந்த கோவிலை விட்டால் வேறு வழியே இல்லை. வேறு தொழிலும் தெரியாது. பார்த்தாலே பாவமாக இருக்கிறது.கல்வியும் வறுமையும் ஏன் நம் நாட்டில் ஒன்றாக பிணைந்திருக்கின்றன என்றே புரியவில்லை.


இவ்வளவு அற்புதமான விசேஷங்களை கொண்ட புராதனமான கோவிலை மிகவும் கஷ்டப்பட்டு பராமரிக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் என்ன ஆகுமோ?

selvabuvana said...

நாகப்பட்டினம் புத்தூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமியும் தெற்கு பார்த்ததவர் தான் அன்பர்களே