Wednesday 13 August 2008

நவீன திருடர்கள்

பிறருடைய பொருளை திருடினாலும், பிறருடைய எழுத்துக்களை திருடினாலும் திருட்டு திருட்டு தானே?
என்னுடைய ஆங்கில பதிவிலிருந்து சிலர் வார்த்தைக்கு வார்த்தை நகல் எடுத்து மின் அஞ்சலில் பிறருக்கு அனுப்புகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த மின் அஞ்சலை எனக்கே யாரோ அனுப்பினார்கள். அந்த மின் அஞ்சலில் ஒரு இடத்தில் கூட இது இன்னாரின் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படவில்லை. ஏதோ தாமே சிந்தித்து எழுதினது போல செயல்படுகிறார்கள். என்ன கொடுமை பாருங்கள்!


இதை விட கேவலம், ஒரு வலைப்பதிவாளர் அப்படியே என்னுடைய ஆங்கில வலைப்பதிவை நகல் எடுத்து தன்னுடைய வலைப்பதிவில் போட்டுவிட்டார். நல்லவேளை, என்னுடைய பதிவில் Copyscape என்ற மென்பொருள் உள்ளதால் சுலபமாக யார் என்னுடைய உழைப்பை திருடினார்கள் என்று கண்டுபிடித்து விட்டேன். அதன் பிறகு அந்த வலைப்பதிவாளருக்கு எழுதி எச்சரித்த பிறகு போனால் போகிறது என்று ஒரே ஒரு வரி கடைசியில் 'இது இந்த வலையிலிருந்து எடுக்கப்பட்டது' என்று எழுதினார்.

இது போன்ற திருட்டுக்களை கட்டுப்படுத்த வழியே இல்லையா? பிறரின் உழைப்பை திருடுபவர்களுக்கு மனசாட்சியே கிடையாதா? வலைப்பதிவை அப்படியே நகல் எடுத்து தன்னுடைய வலைப்பதிவில் போடுபவர்களை கண்டுபிடிக்க மேற்கூறிய மென்பொருள் உள்ளது. ஆனால், அதை நகல் எடுத்து மின் அஞ்சலில் அனுப்புபவர்களை எப்படி track செய்வது? யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன்.

சில நிறுவனங்களில் எலியை right-click செய்தால் சில commandகள் வேலை செய்யாது. அது போல இந்த copy commandஐ bloggerல் disable செய்ய ஏதாவது வழி இருக்கிறதா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

3 comments:

Anonymous said...

I have also been a target of such people. I think at this point of time there is nothing much one can do about it.

Anonymous said...

Dear Friend,

Why you should have that angry...First you have to happy to view many of them utilise your thinking ... that is right your name must be spelled.. but in practical even in our office.. or home or anyohter place.. the original work done may be spelled as who dominated person on that place utilised. for example.. if any police man caught the theif, but the superintendent will be spelled as caught by me...even not my team.. cool down.. be happy for your words read by many...

with regards.

Expatguru said...

வருகைக்கு நன்றி அனானி. என்னுடைய ஆங்கில வலைப்பதிவில் கூகிள் விளம்பரங்கள் உள்ளன. அவற்றை வாசகர்கள் திறந்து பார்க்கும்போது எனக்கு பணம் வருகிறது. ஆனால், எனது உழைப்பை பிறர் நகல் எடுத்து மின் அஞ்சலில் வெளியிடும்போது அந்த வருமானம் எனக்கு இழப்பு தானே? இது தான் பிரச்னையே. நான் ஒரு விஷயத்தை எழுதும் போது அதற்காக நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகிறேன். ஆனால், ஒரு விதமான உழைப்புமே இல்லாமல் யாரோ ஒருவர் அதை திருடி ஏதோ தானே எழுதிய மாதிரி போடுவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.