Wednesday 19 November 2008

உணவுக்கு பதில் மண்

1960களில் நடந்த சம்பவம் இது. சீனாவுடன் ஆன போரில் இந்தியா தோல்வியை தழுவியது. போருக்கு பிறகு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் தலை விரித்தாடியது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவிடமிருந்து நாம் உணவு கேட்குமளவுக்கு பஞ்சம் இருந்தது.



அப்போது அமெரிக்கா "இலவசமாக" உணவு வழங்க ஒப்புக்கொண்டு பல கோதுமை கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்பியது.


என்ன இருந்தாலும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? லால் பஹதூர் சாஸ்திரிக்கு பிறகு அப்போது தான் இந்திரா காந்தி பதவி ஏற்றிருந்த நேரம். அமெரிக்கா நமக்கு அளித்த கோதுமைக்கு பதிலாக ஏதாவது நாம் திரும்ப அவர்களுக்கு கொடுக்க வேண்டுமே. அதனால் நட்புறவை காப்பதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரிடம் இந்திரா இந்த விஷயத்தை பற்றி பேசினார். அமெரிக்கா உடனே மேலும் சில கப்பல்கள் நிறைய கோதுமை அனுப்பியது. பிறகு சாவகாசமாக ஒரு நாள் ஒரு கோரிக்கை விடுத்தது. அதை கேட்டு இந்திரா அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார்.


அமெரிக்கா அளித்த கோதுமைக்கு பதிலாக அவர்கள் பதிலுக்கு கேட்டது என்ன தெரியுமா? இந்திய மண். அதுவும் சாதாரணமான மண் இல்லை, கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் தெற்கே கடலோரத்தில் இருக்கும் மண் தான் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது.


கோதுமைக்கு பதிலாக மண் கேட்கிறார்களே, அப்படி அதில் என்ன விசேஷம் என்று உளவுத்துறை அதிகாரிகளை விட்டு ஆராய இந்திரா உத்தரவிட்டார். அவர்கள் கொடுத்த ஆய்வரிக்கை பல உண்மைகளை உடைத்தது.
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவின் தெற்கு பகுதி வரை உள்ள கடற்கரை மணல் சாதாரணமான மணல் இல்லை. கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்படும் தோரியம் மற்றும் பல அரிய வகை மினரல்கள் இந்த மணலில் கலந்து இருக்கிறது. இந்த தோரியம் அணு ஆயுதங்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு பொருள். உளவுத்துறையின் அறிக்கை படி அமெரிக்கா தனது செயற்கைகோள்களின் உதவியுடன் இதை கண்டுபிடித்து விட்டிருந்தனர். அது மட்டும் அல்ல, இந்த ஏரியாவில் பல தனியார் நிறுவனங்கள் தோரியம் போன்ற பல அரிய மினரல்களை கடல் மணலிலிருந்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


உடனே விழித்துக்கொண்ட இந்திரா, உடனடியக இந்த தனியார் நிறுவனங்களை எல்லாம் தேசியமயமாக்கி Indian Rare Earths Limited என்ற நிறுவனத்துடன் ஐக்கியமாக்கி விட்டார். தமிழகத்தில் மணவாளக்குறிச்சி என்ற இடத்தில் IREL லின் பெரிய ஆராய்ச்சி கூடத்தை நிறுவினார்.
அமெரிக்காவின் இந்த‌ சூழ்ச்சி இந்திராவை பெரிதும் பாதித்த‌து. அத‌ற்கு பிற‌கு சிறிது சிறிதாக‌ இந்தியா அப்போதைய‌ சோவிய‌த் யூனிய‌னுட‌ன் நெருங்கி செல்ல‌ ஆர‌ம்பித்த‌து. அன்று மட்டும் நாம் இந்திய மண்ணை விஷயம் தெரியாமல் அமெரிக்காவுக்கு கொடுத்திருந்தோமானால் சரித்திரம் மாறியிருக்கும்.

16 comments:

சரவணகுமரன் said...

சுவாரஸ்யமான வரலாற்று செய்தி....

Expatguru said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன். இன்று அதே அமெரிக்காவுடன் இந்தியா அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது என்பது தான் வியப்பு. ஒரு 40 ஆண்டு காலத்தில் சரித்திரம் எப்படி மாறுகிறது பார்த்தீர்களா?

astle123 said...

Indira did very bold steps on that period that saves India from many problems. Remember thy good leaders

Anonymous said...

//ஒரு 40 ஆண்டு காலத்தில் சரித்திரம் எப்படி மாறுகிறது பார்த்தீர்களா?//

Yesterday’s India was under (Prime Minister) Indira Priyadarshini Nehru; today’s India is under (Super Prime Minister) Edvige Antonia Albina Maino.

Expatguru said...

இந்திரா காந்தியை பற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அவர் அவசர சட்டம் கொண்டு வந்த காலத்தில் பல எதிர்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவை அனைத்தும் இருந்தாலும் கடந்த நூற்றாண்டின் தலை சிறந்த அரசியல்வாதிகளில் இந்திராவும் ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக பங்களாதேஷ் உருவானதில் அவர் ஆற்றிய பங்கும் அவருடைய தைரியமும் எந்த 'ஆண்' அரசியல்வாதிக்கும் வந்ததில்லை.

Expatguru said...

வாருங்கள், நம்பி ஐயா.

:)

Anonymous said...

Wrong and false information. Could you please add a link or source for this information.

Actually when our Kerala coir factories (most of them situated near the sea soar) export the coir ropes to Japan they found that the sand in the coir has Thorium.

Sakthi

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

வணக்கம்,
இந்த மணவாளக்குறிச்சி நான் பிறந்து வளர்ந்த இடமானதாலும், என் தந்தை நாற்பது வருடங்கள் இந்த மணல் ஆலையில் பணிபுரிந்ததாலும் சில விசயங்களை சொல்ல கடமை பட்டுள்ளேன்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே இங்கிருந்து தென்னங் கதம்பையால் தயாரிக்கப்படும் கயிர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. அப்போது அதில் ஒட்டி இருந்த பளபளக்கும் கருப்பு மணலை பார்த்த போர்சிகீசியர்கள் அதன் உபயோகம் அறிந்து முதன்முதலில் இங்கு மணலை எடுக்க ஆரம்பித்தார்கள். அப்போது சுளவு கொண்டு இந்த மணலை தனியாக பிரித்து எடுத்ததாக என் தந்தை சொன்னார். பின்னர் இந்த ஆலையானது வெள்ளையர்களின் வசமானது.
இன்று இது இந்திய அரசுக்கு சொந்தமாகவுள்ளது. எங்கள் கிராமத்தை அழகு படுத்திய பல மணல் குன்றுகள், நான் சிறுவயதில் விளையாடிய என் வீட்டின் அருகிலுள்ள மணல் குன்றுகள் எல்லாமே இன்று இந்த ஆலையால் எடுக்கப்பட்டுவிட்டது.

செல்வராஜ்
லண்டன்.

ஆட்காட்டி said...

இப்ப இந்தியாவையே குடுத்திட்டாங்களே?

பாபு said...

நல்ல தகவல்

Expatguru said...

நன்றி, பாபு. அடிக்கடி வாருங்கள்.

Expatguru said...

தகவல்களுக்கு நன்றி, செல்வராஜ்.

Expatguru said...

வருகைக்கு நன்றி, சக்தி. இதை எப்படி தவறான தகவல் என்று கூறுகிறீர்கள்? கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பாருங்கள். இது ஐ.ஆர்.ஈ.எல்.ன் வலைத்தளம். 1963ல் மனவாளக்குறிச்சியில் பல தனியார் நிறுவனங்கள் இருந்ததையும் அவை எல்லாவற்றையும் அரசாங்கம் நாட்டுடமை ஆக்கியதையும் தெளிவாக விளக்குகின்றதே!

http://irel.gov.in/scripts/about_us.asp

முரளிகண்ணன் said...

nice and interesting information

Expatguru said...

நன்றி, முரளிகண்ணன். அடிக்கடி வந்து உங்களது கருத்துக்களை கூறுங்கள்.