Tuesday 19 September 2017

விடை பெறுகிறேன்

2007 முதல் இந்த வலைப்பதிவில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன். எனக்கு இதனால் கிடைத்த நண்பர்கள் ஏராளம். விளையாட்டாக ஆரம்பித்த எனக்கு  நீங்கள் கொடுத்த ஆதரவும் உற்சாகமான வரவேற்பும் என்னை திக்குமுக்காட வைத்து விட்டன.

காலத்தின் சுழற்சியில் வந்து போவது பல. அதில் இந்த ப்ளாகரும் ஒன்றோ? பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இனி வரும் பதிவுகளை முகநூலில் பதிவிட முடிவு செய்துள்ளேன். என்னை எழுத தூண்டியது நீங்கள் கொடுத்த ஊக்கமும் தமிழின் மேல் எனது தீராத ஈடுபாடும் தான். தயவு செய்து முகநூலில் https://www.facebook.com/madrasthamizhan/ என்ற முகவரியில் 'Like' மற்றும் 'Follow ' பொத்தான்களை அழுத்திவிடுங்கள். இதை ஒரு முறை செய்தால் போதும். அதன் பின் புதிய பதிவுகள் உங்களுடைய முகநூலிலேயே நீங்கள் வாசிக்கலாம். இங்கிருந்து விடை பெறுகிறேன் நண்பர்களே! முகநூலில் சந்திப்போம்.

8 comments:

G.M Balasubramaniam said...

வாழ்த்துகள் அப்படி என்ன முகநூல் மோகமோ

Expatguru said...

நன்றி ஐயா. இதை காலத்தின் மாற்றம் என்று கூறலாமா? சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடலாம், Facebook account இல்லாமல் இருக்க முடியாதாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடலாம், Facebook account இல்லாமல் இருக்க முடியாதாம்.-இது ஒரு கூடாத வியாதியாமே! பயமுறுத்துறாங்களே!!

Expatguru said...

ஹா, ஹா, யோகன். இது கூட பரவாயில்லை. விடுமுறைக்காக ஒரு மலைப்பிரதேசத்துக்கு சென்றிருந்த போது நான் தங்கி இருந்த விடுதியில் Wifi வசதி இல்லை. அங்கு சுற்றுலாவுக்காக வந்திருந்த சிலர் எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரி பதறியதை பார்த்த போது உண்மையிலேயே மக்கள் இந்த நோய்க்கு அடிமையாகி விட்டார்களோ என்று தோன்றியது..

saamaaniyan said...

நண்பரே நலமா ?

ஒவ்வொரு படைப்பாளியின் எழுத்துக்கும் ஒரு தனித்துவமிருக்கும்... ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு.

நண்பர் காரிகன் மூலமாகத்தான் முதலில் உங்களின் வலைப்பூவினை அறிந்தேன்... தங்களின் படைப்புகளை படித்த போது வாழ்வியல் பதிப்புகளில் நாமிருவரின் எழுத்திலும் ஏதோ ஒரு ஒற்றுமையை உணர்ந்தேன் !


நான் நேசிக்கும் இன்னும் சில பதிவர்களும் இப்போது முகநூல் பக்கம் போய்விட்டார்கள் ! உங்களை போன்றவர்களின் ஆழமான, அர்த்தமுள்ள பதிவுகளை முகநூலில் ஆத்மார்த்தமாய் படிக்க இயலுமா என தெரியவில்லை... எனக்கு ஏனோ முகநூலில் நாட்டம் வரவில்லை !

என்னை போன்றவர்களுக்காக முகநூல் பதிவுகளை வலைப்பூவிலும் பதிவேற்றினால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையுடன் தங்களின் எழுத்துபணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

நன்றியுடன்
சாமானியன்

புதிய பதிவு " எனது ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் ! "
https://saamaaniyan.blogspot.fr/2017/09/blog-post_29.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.

Expatguru said...

மிக்க நன்றி, ஸாம். உங்களது உற்சாகமான வார்த்தைகள்தான் எனது உயிரூட்டமே. காலத்தின் கட்டாயத்தினால் முகநூலுக்கு செல்கிறேன். இதுவும் பலர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான். தட்டச்சு இயந்திரத்திலிருந்து கணிணிக்கு நாம் மாறவில்லையா, அது போல இதுவும் ஒன்று என்று நினைத்து கொள்ளவேண்டும். எப்போதும் போல முகநூலிலும் நீங்கள் வந்து உங்களது கருத்துக்களை பதிவிடுங்களேன் ஸாம்.

காரிகன் said...

நண்பரே

மாற்றம் தேடி செல்லும் உங்களுக்கு என் வாழ்த்து. நண்பர் சாம் தெரிவித்ததைப் போல முகநூலில் உங்களை தொடரமுடியுமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தாலும் என்னை வசீகரித்த உங்களின் எழுத்து இன்னும் பலரை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி.

Expatguru said...

மிக்க நன்றி காரிகன். உங்களை போன்ற நன்பர்களின் உற்சாகமூட்டும் கருத்துக்களால் தான் நாட்கள் இந்த வலைப்பதிவினில் எழுத முடிந்தது. நல்ல தமிழை படிப்பவர்களும் சரி, ரசிப்பவர்களும் சரி, மிகவும் குறைந்துவிட்டனர். பேசாமல் எழுதுவதையே நிறுத்திவிடலாம் என்றே தோன்றுகிறது.