பாரதிக்கு பிறகு தமிழில் அதிகம் நேசிக்கப்பட்ட, வாசிக்கப்பட்ட, ரசிக்கப்பட்ட கவிஞன் ஒருவன் உண்டென்றால் அது கண்ணதாசனாக தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. 'கவியரசர்' என்று எத்தனை பேர் தன்னைத்தானே கூறிக்கொண்டாலும், உண்மையான கவியரசர் கண்ணதாசன் தான். கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலும் தனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை பின்பற்றி எழுதப்பட்டது என்று கூறுவார்கள். அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன். படித்து ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
Friday, 17 October 2014
Monday, 29 September 2014
சூரத் நினைவுகள்-2
வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். சிலரை சந்தித்த பின் பல இனிமையான நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலரை ஏன் சந்தித்தோம் என்று நினைக்க தோன்றும். சூரத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை.
Monday, 11 August 2014
கண்ணன் வெண்பா
கண்மூடி குழலூதும் கலிவரதா மாந்தர்க்கிம்
மண்ணதனில் உனையன்றி கதியேது? தேரோட்டித்
திண்டோளா நின்பாதம் பற்றுவோ ரகந்தனிலே
கொண்டாட்டம் தானே தினம்!
விரலொன்றில் மலைதூக்கி புவிகாத்த பூபதியே
வரமொன்றை வழங்கவா வரதா! - கூட்டை
மறந்தான்மா உனைத்தேடி பரிதவிக்கும் நேரத்தில்
பரந்தாமா எனைக் காக்கவா !
கோவிலுள் குடிகொண்ட கருவழகன் கண்ணனைத்
தாவியே வளைத்திடத் தோன்றுதே! தவிக்கும்
ஆவியை அணைத்திடுவாய் அச்சுதா னந்தனே
பாவியெனை பொருத் தருள்வாய்!
கரந்தூக்கி உனைத்தொழுதேன் கார்வண்ணக் கண்ணாமதி
மறந்தேநான் பிழைசெய்தின் பொறு - என்றும்
புறந்தள்ளி பாவியெனப் பகராமல் பரம்பொருளே
நரனென்னை காத்திடுவாய் நீ!
பற்றிட்டேன் உன்பாதம் பூவுலகில் எனக்கிங்கு
மற்றேதும் வேண்டாமே மாதவா - தாமதம்
சற்றேயும் செய்யாமல் எம்மின்னல் அகற்றிடவே
கொற்றாநீ வந்துடனே காப்பாய்!
சீர்நல்கும் திருவுள்ளத் திருத்தாயும் மாலுந்தன்
மார்பதனில் அருள்கின்றாள் அழகாக - மாந்தர்
பாரினிலே உன்பாதம் பற்றிற்றால் போதுமினி
ஓர்பிறவி வேண்டாமே எமக்கு.
கண்ணனவன் திருப்பாதம் பற்றிற்றால் போதுமுன
தெண்ணமும் ஈடேறும் மனமே - முன்செய்
பண்டைவினை தீர்த்திடுவான் பரமபத பரந்தாமன்
விண்டைநீ விடா திரு!
நாராயணா வென்றத் திருநாமம் நாமுரைத்தால்
தீராத நோயாவும் தீர்ப்பான் - மாந்தர்
கோராமல் தானுணர்ந்து வரந்தன்னை வழங்கிடுவான்
மாறாது அவன்பாதம் பற்று!

Sunday, 6 July 2014
கோபாலபுரத்து கனவுகள்
மெட்ராஸின் லாயிட்ஸ் சாலையிலும் பிறகு கோபாலபுரம் இரண்டாவது குறுக்கு தெருவிலும் எனது இளமைக்காலம் கழிந்தது. லாயிட்ஸ் சாலையில் உள்ள பிரபல வட இந்திய பள்ளியில் தான் நான் படித்தேன்.
Monday, 2 June 2014
சலாம் பம்பாய்-6
1993ம் வருடம். சூரத்திலிருந்து பம்பாய்க்கு என்னை மாற்றியிருந்தார்கள். (இதற்கான முந்தைய பதிவை இங்கே படிக்கலாம்).
Monday, 19 May 2014
நரசிம்ம பாமாலை
தும்பிக்கை நாயகனே தூமணிநற் தூயவனே
எம்பாவை ஏற்றுகிறேன் காத்திடுவாய் கணநாதா
அம்பிகைதன் நற்பிள்ளை யார்போல் இப்பாரினிலே
உம்பக்கம் அருள்வாயே பாமரனென் பாவினிலே
(எம்பாவை=எனது பா, பக்கம்=அன்பு, ஆசி)
பாற்கடலில் படுத்தருளும் பரமபத பரந்தாமா
நாற்றிசையும் தொழுமேதா மோதராநின் பாதத்தை போற்றிடவே வந்திடுவாய் சீக்கிரமே செந்தமிழில்
ஆற்றிடவே நீயருள்வாய் அடியவனின் நாவினிலே
(நாற்றிசை = நான்கு திசை)
திருமாது காதலுடன் கொழுநன்னை கண்டிடவே
மறுபுறத்தில் மாதேவர் மலரடியை போற்றிடவே
கருடந்தன் சிறகடித்து பதமலரை பற்றிடவே
இருகரத்தை இணைதூக்கி தொழுதிட்டோம் திருமாலே!
(திரு = மஹாலக்ஷ்மி, கொழுநன் = கணவன்)
இரணியகசி பென்றரக்கன் தவமொன்றை புரிந்தானே
பிரமா நீ வரந்தாவென மன்றாடி விழைந்தானே
தரமதனை பாராது நான்முகனும் நல்கிடவே
அரக்கனுந்தன் சிரசதனில் செருக்கேறி சினந்திட்டான்
மறையோதும் மாமுனிகள் அரியவனின் அடியவரை
சிறைபிடித்துத் துன்புறுத்தி சிரசுதிரம் சிந்திட்டான்
அறையுச்சி தனிலிருந்து உருட்டியதை செருக்குடனே
பறைசாற்றி பழிதீர்த்தான் பரிகாசச் சிரிப்புடனே
(மறை=வேதம், அரி=மஹாவிஷ்ணு, சிரசுதிரம்=சிரசு(தலை)வெட்டிய இரத்தம்,அறை=மலை)
பாலைதனில் சோலைபோல் பிறந்தானொரு நன்மகன்
ஓலைபல கற்றறிந்தான் ஒழுக்கமுடன் வீரனவன்
ஏலைபோல் பரவியதவன் அரிநாம பக்திமணம்
கோலைச்சின மேற்றினான் சிங்காரச் செல்வனவன்
(சதிர்=சுட்டி,அழகு, ஏலை=ஏலக்காய், கோல்=அரசன் (அதாவது ஹிரண்யகசிபு), சினம்=கோபம்)
நானடா அரியென்றான் தரங்கெட்ட தந்தையுமே
ஏனடா தடம்மாறித் தவிக்கின்றாய் மகனேயென
கானகக்கரி வேழத்தின் காலடியில் கிடத்திட்டான்
வானவந்தன் கருணையினால் வடுவதனை காத்திட்டான்
(கானகம்-காடு, வேழம்-யானை,வானவன்=மஹாவிஷ்ணு,வடு=சிறுவன்)
மதிமயங்கி அரக்கனவன் எங்கேயுன தரியெனவே
பதியுள்ளார் தூணிலும் துரும்பிலுமே அவனன்றி
கதியில்லை என்றிட்ட நல்லிளம்பிஞ் சிறுவனையே
அதிகோப வனல்பறக்க அறைந்தானே அரக்கனுமே
(பதி=மஹாலக்ஷ்மியின் கணவர்)
எங்கேயரி எனக்கேட்டான் செருக்கேறி அரக்கனவன்
இங்கேயென வெடித்திட்டான் விண்ணகரான் விழிப்புடைக்க
பொங்கிய ஆழினைப்போல் மூவுலகும் நடுநடுங்க
ரங்கனவன் கொதித்திட்டான் கோபத்தில் கண்சிவக்க
(செருக்கு = அகங்காரம், விண்ணகரான்=மஹாவிஷ்ணு, ஆழி=பெருங்கடல் )
நரவரிமா மின்னல்போல் தூண்பிளந்து தகர்த்தெறிய
அரக்கந்தன் குடலதனை அடியோடு அழித்தவரி
பிரகலாத பூம்பாலன் மழலைச்சொல் மயக்கத்தில்
பரம்பொருளும் பொன்வாயால் புன்னகைப்பூ புரிந்தானே
(நரவரிமா= நர+அரிமா, நர=மனிதன், அரிமா=சிங்கம்)
(அழித்தவரி = அழித்த + அரி, அரி = மஹாவிஷ்ணு)
பிரகலாதக் குழந்தைக்கு அருள்புரிந்த அரங்காநீ
வரலாதா வரதாயெம் குறைதீர்த்து அருளிடவே
கரந்தூக்கி எமைக்காத்து அணைத்திடவே வந்திடுவாய்
சிரந்தாழ்த்தி வணங்குகிறேன் அடியேனை பொறுத்திடுவாய்
நாராயணா என்றாலே நன்மைபல நல்கிடுமே
கோராமல் கொடுப்பாயே கோடானு வரந்தனையே
ஏராதெனக் கூறாமல் அடியேனை அணைத்திடுவாய்
தீராவினை தன்னைத் தீர்த்திடுவாய் திருமாலே
(ஏரா = முடியாது)
நரசிம்மன் கதைதன்னை கேட்டிடும் நல்லடியாரைக்

கரந்தூக்கி காத்திடுவான் கார்மேகக் கண்ணபிரான்
மறவாமல் இப்பாவை ஓதிடும் நல்லடியார்க்கு
பரமபதப் பரந்தாமன் அருளிடுவான் ஆனந்தமே
Monday, 12 May 2014
பர்மா பேஜார்!
உலகின் எல்லா பெரிய ஊர்களிலும் திருட்டு சமாசாரங்கள் விற்பனை செய்யப்படும் இடம் என்று ஒரு பகுதி பெயர் பெற்றிருக்கும். உதாரணம், டெல்லியின் 'சோர் பஜார்'. இது போன்ற இடங்களுக்கு சென்றால் கண்டிப்பாக நீங்கள் ஏமாறுவீர்கள் என்பது நிச்சயம். அது போன்ற 'சிறப்பான' இடம்தான் மெட்ராஸில் உள்ள பர்மா பஜார்.
Subscribe to:
Posts (Atom)