Monday, 5 January 2009

கணிணி துறையினரும் நிதி நெருக்கடியும்

நிதி நெருக்கடி உலகம் முழுவதும் பரவி விட்டது. இதில் எல்லா துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக கணிணி துறையினருக்கு பாதிப்பு அதிகம் என்றே கூறலாம்.


கணிணி துறையினரின் இந்த வீழ்ச்சி யாருமே எதிர்பாராதது. இதற்கு முக்கிய காரணமே பெரும்பாலான கணிணி துறையினர் அமெரிக்காவினரால் outsource செய்யப்பட்ட வேலைகளை செய்வதால் தான். அமெரிக்கா தும்மினால் உலகம் முழுவதும் ஜலதோஷம் பிடித்து கொள்ளும் என்று ஒரு ஆங்கில பழமொழி உள்ளது. அது கணிணி துறைக்கு நன்றாகவே பொருந்தும்.


துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் நிதி நெருக்கடி உலகம் முழுவதும் இப்பொழுது பரவிவிட்டது. பல இரும்பு உருக்காலைகள் மூடும் தருவாயில் உள்ளன. வாகன உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பலவற்றில் ஆட்குறைப்பு நடந்து கொண்டுதான் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் துபாய், அபுதாபி போன்ற இடங்களில் இதன் தாக்கம் மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது. செளதியை மற்றும் கத்தாரை பொருத்தவரை புதிய projectகள் பல தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான ஒப்பந்தக்கார நிறுவனங்களும் அதில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கணிணி துறையின் வீழ்ச்சியை சிலர் உள்ளூர மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பது அறியாமையின் வெளிப்பாடே. ஆழ்ந்து ஆராய்ந்தால் சமூகத்தில் கணிணி துறையினர் ஏற்படுத்திய திடீர் பொருளாதார ஏற்ற தாழ்வு பலருக்கு கடுமையான பண தட்டுப்பாட்டையும் அதனால் இந்த துறையினர் மீது பொறாமையும் சேர காரணமாக இருந்து விட்டது என்பதே உண்மை.


நான் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை, ஆனால் "சில" கணிணி துறையினர் திடீர் பணக்காரர்கள் ஆனதால் தலைக்கேறிய போதையில் ஏதோ மேலை நாட்டில் இருப்பது போல பொது இடங்களில் நடந்து கொள்வதும், ஆண்/பெண் பேதமின்றி மிகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொள்வதும், அந்த ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக அனைத்து கணிணி துறையினரும் மற்ற சிலரின் வெறுப்பையே சம்பாதித்து கொண்டதும் உண்மை. குறிப்பாக சென்னையிலிருந்து மஹாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாரக்கடைசிகளில் நடந்த சம்பவங்களை யாராலும் எளிதாக மறக்க முடியாது.


இது ஒரு புறம் இருக்க, இந்த திடீர் பணக்காரர்களுக்கு கையில் இவ்வளவு பணம் வந்தவுடன் ஊரில் இருக்கும் வீடுகளை எல்லாம் வாங்க ஆரம்பித்தனர். பணப்புழக்கம் திடீரென்று அதிகமானவுடன் கூடவே விலைவாசியும் ஏற ஆரம்பித்தது. இதனால் சாதரண மக்களின் பாடு தான் திண்டாட்டம் ஆகிவிட்டது.


உதாரணமாக‌, 5000 மாத வாடகை கொடுத்து கொண்டிருந்தவனை வீட்டுக்காரன் திடீரென்று "15000 கொடு, இல்லையென்றால் கணிணி துறையினர் கொடுக்க தயாராக உள்ளனர், அதனால் வீட்டை காலி செய்" என்று சர்வ சாதாரணமாக கூறியதால் எத்தனை பேருக்கு வயிற்றெரிச்சல் தெரியுமா? இவர்களாவது பரவாயில்லை, வட்டி விகிதம் அதிகம் வரும் என்ற நினைப்பில் VRS பெற்று கொண்டு திடீரென்று ஏறிய விலைவாசியால் தவித்த/தவிக்கின்ற நடு வயதுக்காரர்கள் எத்தனை பேர் தெரியுமா? லட்சக்கணக்கில் விற்ற வீடுகளை கோடிக்கணக்கில் விலை ஏறிவிட ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சென்னை போன்ற நகரங்களில் வீடு வாங்குவது இந்த ஜென்மத்தில் முடியாது என்கிற நிலைமை ஆகிவிட்டது. இதற்க்கு காரணம் கணிணி துறையினர் மட்டும் தான் என்று கூறவில்லை, ஆனால் கணிணி துறையினர் சமுதாயத்தில் ஏற்படுத்திய பொருளாதார தாக்கமும் ஒரு காரணம் என்று தான் கூற விரும்புகின்றேன்.இந்த நிதி நெருக்கடி தற்காலிகமானது தான். ஆனால் பழையபடி நிலவரம் சரியாக பல மாதங்களாகும் போல தோன்றுகிறது. நஷ்டப்படுவது கணிணி துறை மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளுமே. இந்த‌ நஷ்டத்தால் நாட்டின் பொருளாதாரமும் நஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பணம் வரும்போது தலை தெரிக்க ஆடுவதும் பணம் தீர்ந்ததும் திண்டாடுவதும் மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். ஆனால், கணிணி துறையாகட்டும் அல்லது மற்ற துறையினராகட்டும், மீண்டும் ஒரு நிதி சுனாமி அடிக்காமல் நம்மை நாம் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் நமது முன்னோர்கள் கூறியபடி "சேமிப்பு" என்கிற பழக்கத்தை எல்லோரும் ஆரம்பிக்க வேண்டும்.

4 comments:

ചാത്തങ്കേരിലെ കുട്ടിച്ചാത്തന്‍. said...

Dear Expatguru,
Your postings in the other blog is great. I really appreciate the time and mind you are applying for the same. I am not able to read your tamil blog, becouse i cannot read tamil. BEST WISHES

Expatguru said...

ചാത്തങ്കേരിലെ കുട്ടിച്ചാത്തന്‍,

Thanks for your encouraging comments.

ஜீவி said...

உணர்ந்து உண்மையை எழுதியிருக்கிறீர்கள்.

நல்லவை நடக்கப் பிரார்த்திப்போம்.

Anonymous said...

Actually real estate went through roof because chidambaram allowed foreign direct investment in real estate. IT employees were victims too. The real profit went to builders and brokers